மாதந்தோறும் பௌர்ணமி’யன்று பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரை வேண்டிக்கொண்டு கிரிவலம் செல்வது வழக்கம். திருவண்ணாமலை கிரிவலப்பாதை சுமார் 14 கிலோமீட்டர் தூரமுடையது. பௌர்ணமியன்று கிரிவலம் செல்ல வெள்ளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்தும் பெரும்பாலான மக்கள் வருவார். அன்று ஒருநாளில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் தரிசனத்திற்காக வந்து செல்வர்.
இந்நிலையில், இந்த மாதம் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி என்பதால் பொதுமக்கள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அன்று கூட்டத்தை சமாளிக்க மூன்று சிறப்பு ரயில்களை தமிழக அரசு இயக்கவுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரயில் வரும் 24-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணிசாலை, போளூர் அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12:05 மணிக்கு வந்தடைகிறது.
மயிலாடுதுறை விழுப்புரம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி காலை 9:15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலையை காலை 11 மணிக்கு வந்தடைகிறது.
தாம்பரம் – விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் திருவண்ணாமலை வரை இயக்கப்பட உள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 24 ஆம் தேதி காலை 9:15 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு திருவண்ணாமலையை 10:45 மணிக்கு வந்து அடையும்.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக சிறப்பு ரயில்களில் பயணித்து தரிசனம் செய்ய அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.