2024’ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி (TNPSC) ஓராண்டு கால அட்டவணை டிசம்பர் இரண்டாவது வாரம் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஓராண்டு கால அட்டவணையின் மூலம் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகிறது. அரசுத் துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-2a மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் ஆகிய விபரங்கள் அடங்கிய ஓராண்டு கால அட்டவணை ஆண்டுதோறும் டி.என்.பி.எஸ்.சி மூலம் வெளியிடப்படும். அதுபோலவே 2024’ம் ஆண்டிற்கான ஓராண்டு கால அட்டவணையை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் டி.என்.பி.எஸ்.சி வெளியிட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
இதில் 30 விதமான போட்டித் தேர்வுகளும் சுமார் 15,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும் விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆக, அரசுத்துறையில் சேர போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர் மத்தியில் இந்த செய்தி மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.