இனிமேல் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சமீபகாலமாக சொந்தவாகனம் வைத்திருப்போர் பலர் வாடகை வாகன செல்போன் செயலிகளில் தங்களை இணைத்துக்கொண்டு பணம் சம்பாரித்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும், ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வந்தன.
இதனால், சொந்த பயன்பாட்டிற்கென வாங்கிய இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளை, இனி செல்போன் ஆப்’களில் இணைத்துக் கொண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு வாடகைக்கு பணம் சம்பாரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாரிகளின் ஆய்வின் போது இவ்வாறு கண்டறியப்பட்டால், வாகனம் பறிமுதல் செய்யப்படுவது மட்டுமல்லாமல், 30,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் வரை RC ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
ஆக, இனிமேல் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையும் என தமிழக அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.