இன்றைய தமிழ் செய்திகள், ஒரு வரி தமிழ் தலைப்புச் செய்திகள். தினமும் செய்திகள் தெரிந்து கொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
👉நாம் தமிழர் கட்சிக்கு மைக் ஒதுக்கீடு செய்யப்படுகிறது – தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
👉2026’ம் ஆட்சியைப் பிடிக்கவே இன்றையத் தேர்தல் கூட்டணி அமைத்திருக்கிறோம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
👉பொன்முடி மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்பு. ஆளுனர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
👉கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். – மருத்துவர் இராமதாசு அறிவிப்பு
👉மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் – மருத்துவர் இராமதாசு அறிவிப்பு.
👉நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் பரப்புரையை திருச்சியில் தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
👉தமிழிசை சௌந்தராஜன் ராஜினாமா செய்த நிலையில், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார்.
👉மதுபான கொள்கை விவகாரம் சம்மந்தமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலக்கத்துறை இன்று கைது செய்தது.
👉உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 126-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலில் பின்லாந்து நாடு தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
👉பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.பாஜக மாநிலத் தலைமை அறிவிப்பு.