நாள் : 23.03.2023
👉 திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.
👉 ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பலி எண்ணிக்கை 100’ஐ கடக்கும் எனத் தகவல். பிரதமர் மோடி கண்டனம்.
👉 தஞ்சை மக்களவைத் தொகுதியில் நடைபயணமாக சென்று திமுக கட்சிக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சத்யா விளையாட்டு மைதானம், காமராஜர் மார்க்கெட்டில் மக்களுடன் சந்திப்பு.
👉 ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.6185க்கும், ஒரு சவரன் ரூ.49,480க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனையாகிறது.
👉 பூட்டானில் நாட்டின் தலைநகர் திம்பு பகுதியில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட நவீன தாய்-சேய் நல மருத்துவமனையை இந்திய பிரதமர் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
👉 தமிழகத்தில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வை அறிவித்துள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்வு.
👉 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் அதிமுக கட்சிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை தொகுதிவாரியாக நியமித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
👉 அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்’க்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, அவர்மீது பதிவு செய்த வழக்கின் விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேட்டு அமலாக்கத்துறை மனு.
👉 திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக, ஜான்சிராணி போட்டியிடுவார் என அதிமுக கட்சித் தலைமை அறிவிப்பு.
👉 தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தமாகா சார்பில் விஜயசீலன் என்பவர் போட்டியிடுவார் என த.மா.க கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு.
மேலும், தமிழ் செய்திகள், மாநில செய்திகள், அரசியல் செய்திகள், இந்தியா செய்திகள், உலக செய்திகள், கல்வி செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் பல செய்திகள் அறிந்துகொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
நன்றி, வணக்கம் 🙏