நாள் : 01.04.2024
👉”கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில், காங்கிரஸ், திமுக காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” – பிரதமர் மோடி
👉இன்று ஏப்ரல் 1, நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர இருந்த நிலையில், அந்த முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
👉19 கிலோ எடை கொண்ட பொது பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.1960-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.1930 ஆக விற்பனை.
👉இன்று ஒரே நாளில், ஆபரணதங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ. 51640’க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 6455.
👉தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்க, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு.
👉”கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம், அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன?” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி.
👉மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கியுள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
👉சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பான அனைத்து வழக்குகளையும், இணைத்து ஒன்றாக விசாரிக்க வேண்டும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிட் மனு தாக்கல்.
👉“எடப்பாடி பழனிசாமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. அதற்கு துணிவு வேண்டும். முதுகெலும்பு வேண்டும்” – ஈரோட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
👉“நாங்களா ஆளுங்கட்சியாக இருக்குறோம்? எதிர்க்கட்சியாக இருக்கும் எங்களால் எப்படி மோடியை எதிர்க்க முடியும்?” – அரக்கோணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
👉“ஊழல் செய்பவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள், மக்களுக்காக நிறைய திட்டங்களை வகுத்துள்ளோம்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா.
👉“நாங்கள் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம். காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, பாஜக நமக்கு 3,000 ஆண்டுகள் பகை ” – தேர்தல் பரப்புரையில் நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
👉நீலகிரியில் கோடை சீசன் தொடங்கியதால், உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய 7 முக்கிய சுற்றுலா தலங்களில் ஜீன் மாதம் இறுதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் செய்திகள், மாநில செய்திகள், அரசியல் செய்திகள், இந்தியா செய்திகள், உலக செய்திகள், கல்வி செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் பல செய்திகள் அறிந்துகொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
நன்றி, வணக்கம் 🙏