நாள் : 02.04.2024
👉 அருணாசலப் பிரதேசத்திலுள்ள 30 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
👉 இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 6,430-க்கு விற்பனை. மேலும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.51,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
👉 இந்திய ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை ஆன்லைன் பேமண்ட் செய்து பெற்று கொள்ளலாம்.
👉 ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் அமீர்.
👉 சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஏப்ரல் 25ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
👉 சென்னைக்கு ரூ.5,000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்திற்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம். இவற்றை தமிழக அரசு என்ன செய்தது ? – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்ராமன் கேள்வி.
👉 மக்களவை தேர்தலில் புதிய நடைமுறையான, EVM மற்றும் கன்ட்ரோல் யூனிட் இடையே VVPAT எந்திரத்தை வைப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு.
👉 EVM மற்றும் கன்ட்ரோல் யூனிட் இடையே VVPAT எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என திமுக புகார்.
👉 தேர்தலில் “பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ₹500 கோடி கிடைத்திருக்கும்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
👉 “தமிழ்நாட்டை 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து கொண்டு நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.” – பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
மேலும், தமிழ் செய்திகள், மாநில செய்திகள், அரசியல் செய்திகள், இந்தியா செய்திகள், உலக செய்திகள், கல்வி செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் பல செய்திகள் அறிந்துகொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
நன்றி, வணக்கம் 🙏