தமிழ் செய்திகள் | நாள் : 16.05.2024
👉 சென்னையில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக நான்கு வெளிநாட்டவர் உட்பட 5 பேரை கைது செய்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை.
👉 இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6,795க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,360க்கும் விற்பனையாகிறது.
👉 செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து ஆகிய வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, பலர் படுகாயமடைந்தனர்.
👉 சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.
👉 தொழிலாளா்கள் மருத்துவ தேவை தவிா்த்து கல்வி, திருமணம், வீடுகட்டுதல் போன்ற காரணம் கோரி பி.எப் முன்பணம் கோரி விண்ணப்பித்தால் மூன்று நாள்களில் பெற முடியும் என EPFO அமைப்பு அறிவித்துள்ளது.
👉 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.iob.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பிக்கலாம்.
👉 உணவுக்கு முன்பும் பின்பும் டீ மற்றும் காபி அருந்தினால் உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்புச் சத்துக்கள் தடைப்படக்கூடும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
👉 அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய பயணியர் படகு தாமதமானதால், இந்தியா- இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைப்பு.
👉 நெல்லை வள்ளியூரில், சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில், பொதுமக்கள் எச்சரித்தும் பேருந்தை ஓட்டிச் சென்று சிக்கயதால், குளச்சல் பணிமனைஅரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்.
👉 தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் ஒழிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.
👉 ஜிம்முக்கு செல்வோர்கள், தசை வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக புரோட்டின் பவுடர்களை அதிகமாக எடுத்துக்கொண்டால் எலும்பு தாது இழப்பு, சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) எச்சரிக்கை.
👉 நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 5 நாட்டுப் படகில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினரை கைது செய்தனர்.
மேலும், தமிழ் செய்திகள், மாநில செய்திகள், அரசியல் செய்திகள், இந்தியா செய்திகள், உலக செய்திகள், கல்வி செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் பல செய்திகள் அறிந்துகொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
நன்றி, வணக்கம் 🙏