நாள் : 25.03.2024
👉 இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால், பல அரசியல் கட்சி வேட்பாளர்களும் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
👉 நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலம் இறங்கிய பகுதிக்கு “சிவசக்தி” எனப் பெயர் சூட்டினார், பிரதமர் மோடி. “சிவசக்தி” பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்.
👉 100 ஆண்டுகளுக்கு பின் நிகழந்த சந்திர கிரகணம். இன்று, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்தது. இன்றையநாள் பங்குனி உத்திரம் என்பதும் சிறப்பு.
👉 இன்று, ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 49,640’க்கு சென்னையில் விற்பனையாகிறது.
👉 வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி வேண்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு.
👉 மைக் சின்னத்திற்கு பதிலாக, படகு அல்லது பாய் மர படகு சின்னம் வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
👉 12 வருடங்களுக்கு பிறகு, இந்த வருடம் நடைபெறும் 17வது IPL சீசனின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்பு.
👉 சென்னை வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யவந்த திமுக, அதிமுக தரப்பினர் இடையே மோதல். யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என வாக்குவாதம்.
👉 இன்று நாடு முழுவதும் மக்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்தி ராமர் கோயிலிலும் ஹோலி கொண்டாடப்பட்டது.
மேலும், தமிழ் செய்திகள், மாநில செய்திகள், அரசியல் செய்திகள், இந்தியா செய்திகள், உலக செய்திகள், கல்வி செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் பல செய்திகள் அறிந்துகொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
நன்றி, வணக்கம் 🙏