நாள் : 26.03.2024
👉 இன்று ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 6200’க்கும், ஒரு சவரன் ரூ. 40 குறைந்து, ரூ. 49600’க்கும் விற்பனையானது.
👉 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகாமையில் பண்ணாரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
👉 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ள நிலையில், ஒருவாரத்தில் அவர்கள் இலங்கை செல்கின்றனர்.
👉 அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்திலுள்ள பால்டிமோர் பாலம், பெரிய சரக்கு கப்பல் ஒன்று மோதியதால் இடிந்து விழுந்தது. அதில் 10 பேர் ஆற்றில் விழுந்தனர்.
👉 தமிழகத்தில் வாக்குப்பதிவு (ஏப்ரல் 19) நாளன்று தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று, தொழிலாளர் நலத்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு.
👉 ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் களம் காண்கிறார். இந்நிலையில், அவருடைய பெயரிலேயே 4பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
👉 நகைச்சுவை நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.
👉 முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும், மேலும், தனக்கு வாளி சின்னம் வழங்க வேண்டும்’ என தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளார்.
👉 “நான் அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன்” என அண்ணாமலை பேச்சு.
👉 அனைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் முக்கிய வேட்பாளராகள் பட்டியலைத் தெரிந்துகொள்ளவும், உங்கள் தொகுதியில் யார் வேட்பாளர்? தெரிந்து கொள்ள : LICK HERE
மேலும், தமிழ் செய்திகள், மாநில செய்திகள், அரசியல் செய்திகள், இந்தியா செய்திகள், உலக செய்திகள், கல்வி செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் பல செய்திகள் அறிந்துகொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
நன்றி, வணக்கம் 🙏