மாவட்ட தொழில் மையம் சார்பில் திண்டிவனத்தில் கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. இதில் மொத்தமாக 2,897 நிறுவனங்களுக்கு 125.84 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஸ்வரன், விழுப்புரம் இந்தியன் வங்கி மேலாளர் ஹரிஹரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வங்கி கடன் பெறும் நடைமுறை மற்றும் சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்தும் பேசினர். நிகழ்ச்சியில், 2,897 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு 125.84 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. பங்கேற்ற இளைஞர் மற்றும் மகளிர் தொழில் முனைவோர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டு, கடன் கோரிய விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டது.
கடன் மேளாவில் 2,897 நிறுவனங்களுக்கு 125.84 கோடி ரூபாய் கடன்
கடன் கோரிய விண்ணப்பங்கள் பதிவு

254