கடந்த வாரம்’தான் சென்னையில் ஒரு சிறுமியை வளர்ப்பு நாய் ஒன்று கடிதத்தில், சிறுமி பலத்த காயமடைந்தார் என்ற செய்தி பரவி தமிழ்நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெறி நாய் கடித்து முதியவர் ஒருவர் காயமடைந்து மருவத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெறிநாய்களால் திண்டிவனம் மக்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்கதையாகி வருகின்றது.
திண்டிவனம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி, இவருக்கு 87 வயதாகிறது. இவர், நேற்று காலை தந்து வீட்டிற்கு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, அவரின் வீட்டருகே படுத்திருந்த வெறி நாய் ஒன்று சரமாரியாக கை, கால் என அணைத்து இடங்களிலும் ராமசாமியை கடித்து குதறியது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டிவிட்டு, காயமடைந்திருந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும், திண்டிவனம் நகராட்சியில் அதிகரித்து வரும் வெறிநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, பொதுமக்கள், கவுன்சிலர்கள் என பலமுறை கோரிக்கை வைத்தும், நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகாவது நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.