திண்டிவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். மொத்தமாக திண்டிவனத்தில் மட்டும் 31 ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கங்கள் இயங்கி வருகிறது. திண்டிவனத்தில் தற்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து கட்டப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் கட்டிடப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் திண்டிவனத்தில் இயங்கும் அனைத்து ஓட்டுநர் சங்கத்திற்கும் தனியே ஆட்டோக்கள் நிறுத்த ஆட்டோ ஸ்டாண்டு இடம் ஒதுக்கித்தர வேண்டி திண்டிவனம் நகராட்சித் தலைவர் திருமதி. நிர்மலாரவிச்சந்திரனிடம் ஆட்டோ சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுமீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடம் ஒதுக்கப்படும் என நகர்மன்றத்தலைவர் உறுதியளித்தார். மேலும் இது சம்பந்தமாக நகராட்சி ஆணையர் திருமதி. தமிழ்செல்வி அவர்களிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்டு வேண்டி மனு
திண்டிவனத்தில் 31 ஆட்டோ சங்கங்கள் இயங்குகிறது

229
முந்தைய செய்தி