திண்டிவனம் அருகே நொளம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்தியஸ்த சார்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளியில் நடந்த முகாமிற்கு முதுகலை ஆசிரியர் அர்ச்சுனன் வரவேற்றார்.
பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். மத்தியஸ்த சார்பு மையத்தின் நோக்கம் குறித்து, வழக்கறிஞர்கள் பாலச்சந்திரன், கிருபாகரன், பாலசுப்பரமணியன், நாகையா ஆகியோர் பேசினர்.
இதில், மத்தியஸ்த சார்பு மையத்தின் பலன்கள் குறித்து, நீதிபதி தனலட்சுமி, உறவுகளை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் முதன்மை சார்பு நீதிபதி தனம், வளமான மனம், வளமான வாழ்வு என்ற தலைப்பில் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மகாலட்சுமி, யோசித்தலின் பலன்கள் என்ற தலைப்பில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ரஹ்மான் பேசினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடந்தது. முதுகலை ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.