திண்டிவனம் ரயில் நிலையம் அருகே காவேரிப்பாக்கம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக இருந்து வந்தது. சமீப காலமாக பெய்து வரும் மழையால் சுரங்கப்பாதையில் ஊற்றுநீர் சுரந்து போக்குவரத்திற்கு தடையாக இருக்கிறது. தேக்கமடைந்த நீர் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. அவ்வப்போது மின்மோட்டார் மூலம் நகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்றி வந்தனர். இந்தநிலையில் மின்மோட்டார் பழுதாதனதால் நகராட்சி சுரங்கப்பாதை வழியை மூடியது. இதனால் பொதுமக்கள் நீண்டதூரம் சுற்றிச் செல்வதால் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். ஆகவே காவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுரங்க பாதையை மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் திண்டிவனம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஊற்று நீர் சுரக்கும் சுரங்கப்பாதை – மூடிய நகராட்சி நிர்வாகம்
மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர பா.ஜ.க கோரிக்கை

231