முகப்பு திண்டிவனம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் – முதல்வர் ஆறுதல்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் – முதல்வர் ஆறுதல்

இரண்டு இலட்சம் ரூபாய் நிவாரணம்

by Tindivanam News

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் மற்றும் நகரம், பெலாகுப்பம் ரோடு, பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்த செல்வன். தேவேந்திரன் (வயது 9) த/பெ. மாரி என்பவர் கடந்த 23.02.2024 அன்று மாலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மின்மோட்டாரைப் பயன்படுத்தும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்து, உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். என்று பதிவிட்டுள்ளார்.”

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  "சாதிய தீண்டாமையால் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகி உள்ளேன்"

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole