திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளில் ஒரு ஆண்டிற்கு மேலாகவும் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த இந்த திட்டத்தின் மீது பொதுமக்கள் பல புகார்களை தெரிவித்து வந்தனர். பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாத நிலையில் பல சாலை விபத்துக்கள் ஏற்பட்டன. இது ஒரு புறம் இருக்க தற்போது, அலட்சியத்தின் காரணமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் முழுவதும் வெள்ளம் போல் பெருக்கெடுத்து சாலையில் வழிந்து ஓடியது. இதனால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட்டது. குடிநீர் வராததால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.