விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் டவுன் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரின் மகன் தர்ஷனுக்கு இரண்டரை வயதாகிறது. கடந்த 11ம் தேதி தர்ஷன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டில் டேபிள் மீது இருந்த தொலைக்காட்சிப் பெட்டி (டி.வி) குழந்தை தர்ஷன் மீது விழுந்துள்ளது.
இதில், படுகாயமடைந்த தர்ஷனுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12 மணியளவில் குழந்தை இறந்துவிட்டது.
தகவலறிந்த திண்டிவனம் போலிசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை டி.வி விழுந்து அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.