அக்டோபர் 2’ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், திண்டிவனம் அருகில் ஏப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் அருகே, ஒலக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஏப்பாக்கம் கிராமத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு காலை 11:00 மணிக்கு கூட்டம் துவங்கியது.
அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர் ஸ்ரீராமுலு, தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை குறைகளைத் தெரிவித்தார். இந்நிலையில், ஸ்ரீராமுலு கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராத ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து, உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முயற்சி செய்தார்.
உடனடியாக அருகில் இருந்த கிராம மக்கள், அவரை தடுத்து நிறுத்தினர். பின்பு, அவரிடம் அபிக்கு வந்திருந்த ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சிலம்பு செல்வர், உங்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
கிராம சபைக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.