திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள இடங்களில் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட ஒலக்கூர் ஒன்றியத்தில் நெய்க்குப்பி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி மற்றும் நிலவியல் ஓடைக்கு உட்பட்ட ஒரு ஏக்கர் நிலம் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது குறித்து தட்சிணாமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம் அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த உத்தரவின் பேரில் கடந்த மாதம் 22ஆம் தேதி நெய்க்குப்பி கிராம ஓடையில் ஒலக்கூர் ஒன்றிய பி.டி.ஓ’யோக்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தில் இருந்த வேலிகள், சிமென்ட் தூண்கள், வாய்க்கால் வரப்புகள் அனைத்தும் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. ஆனாலும் மனுதாரர் ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றப்படவில்லை என மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனால் மீண்டும் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை, வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையில் போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினர் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

237
முந்தைய செய்தி