சென்னையிலிருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த காதல் ஜோடியில், பெண் மட்டும் மர்ம சாவு. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மாதவரம் பகுதியை புருஷோத்தமன் மகன் ரமேஷ், வயது 21. சென்னையில் தனியார் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சென்னையில் தங்கி துணிக்கடையில் வேலை செய்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பவித்ரா, வயது 20 என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் கடந்த வாரம் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது லோக்கூர் டோல் கேட் அருகிலிருந்து இருவர் ரமேஷையும், பவித்ராவையும் துரத்தி வந்து ரமேஷிடம் இருந்த மொபைல் போனை பறித்துக்கொண்டுள்ளனர். அதோடு இல்லாமல் பவித்ராவிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை, 3.30 மணியளவில், இதனால் பயந்து சாலையில் பவித்ரா ஓடியபோது அவர்மேல் சென்னை – திண்டிவனம் நோக்கிச்சென்ற கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பவித்ரா இறந்துவிட்டார். இவ்வாறு சடலத்தின் அருகில் நின்றுகொண்டிருந்த அவரது காதலர் ரமேஷ் கூறினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், சடலத்தைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு, ஓங்கூர் டோல்கேட் முதல் ஒலக்கூர் கூட்ரோடு வரை உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், சம்பவ நேரத்தில் அவ்வழியே சென்னையில் இருந்து வந்த கார் மீண்டும் ஒலக்கூர் கூட்ரோடு வழியாக சென்னை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.