திண்டிவனம் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த மே மாதம் இறந்துவிட்டார். இவர் திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் அருகில் சவுண்ட் சர்வீஸ் மற்றும் எலக்ட்ரானிக் சரிபார்ப்பு கடை நடத்தி வந்தார். அவர் இறந்த பின்பு இந்த கடை வெகு நாட்களாக பூட்டியே கிடந்தது. இந்நிலையில் நேற்று வெங்கடேசனின் மனைவி தெய்வநாயகி கடையைத் திறக்கும் பொழுது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த எலக்ட்ரிக் சாதனங்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தெய்வநாயகி கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிக் கிடந்த சவுண்ட் சர்வீஸ் கடையில் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

286
முந்தைய செய்தி