முகப்பு திண்டிவனம் பிரதான சாலை சேதம் சொரப்பட்டு கிராம மக்கள் அவதி

பிரதான சாலை சேதம் சொரப்பட்டு கிராம மக்கள் அவதி

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்

by Tindivanam News
village roads damaged at sorapattu near brammdesam

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே சொரப்பட்டு கிராமம் அமைந்துள்ளது, இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் ஒவ்வொரு பருவமழையின் போதும் இந்த கிராமத்திற்கு முருக்கேரியில் இருந்து செல்லும் பிரதான சாலையில் அமைந்திருந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும், இதன் காரணமாக கிராமத்தின் வழியாக செல்லக்கூடிய சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகுந்த அவதியடைந்து வந்தனர், இந்த நிலையில் இந்த தரைப்பாலத்தை உயர் மட்டபாலமாக அமைப்பதற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மிகுந்த தொய்வுடன் நடைபெற்றதால் தற்போது பெய்த பருவ மழையினால் பாலத்தின் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த சாலையில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடியது, இதனால் இந்த வருடமும் சொப்ரபட்டு கிராம மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள காயல்மேடு, தலைகாணி குப்பம், உப்பு வேலூர், தேவனந்தல், வங்காரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேர்ந்த மக்கள் அமைதி அடைந்துள்ளனர், எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக பாலக்காட்டுமான பணிகளை துவங்க வேண்டும் எனவும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் ஜல்லிகற்கள் கொண்டு பாதையை சீரமைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்டு வேண்டி மனு

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole