விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு மருத்துவமனை எதிரில் பல்வேறு கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியைச் சரியாக பராமரிக்காததால், குப்பைகள் சேர்ந்து மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மேலும், குடிநீர்த்தொட்டியில் புழுக்களும் காணப்படுகின்றது.
இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் புழுவுடன் வரக்கூடிய குடிநீரை பயன்படுத்த முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. மேலும், இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாய நிலையும் உருவாகியுள்ளது.
எனவே, உடனடியாக இந்த குடிநீர்த் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடன், குறிப்பு செய்தியாக இந்த குடிநீர்த்தொட்டி அமைந்திருக்கும் வார்டு, திண்டிவனம் நகர மன்ற சேர்மன் ஆர் ஆர்.எஸ். ரவிச்சந்திரன் அவர்களின் வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.