சென்னையில் முதுகலை மருத்துவம் படிக்கும் பெண் ஒருவர் சென்னையில் இருந்து சொந்த ஊரான திருநெல்வேலிக்கு பயணம் செய்து கொண்டிருந்துள்ளார்.அப்போது, திண்டிவனம் அருகில் நின்ற பேருந்தில் திருநெல்வேலியை சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர். அவர்களுள் மதுபோதையில் இருந்த இருவர் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர். இதனை அப்பெண் கண்டித்து அவர்களை நோக்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் மீண்டும் மீண்டும் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு இருந்துள்ளனர். அதனால் உடனடியாக விழுப்புரத்தில் இருக்கும் தனது உறவினர்களிடம் விஷயத்தை கூறிய, அப்பெண் மீண்டும் அந்த கும்பலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விஷயத்தை அறிந்த பெண்ணின் உறவினர்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் பேருந்தை நிறுத்த முற்பட்டுள்ளனர்.
ஆனால், பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். பின்னர், சினிமா பட பாணியில் ஆம்னி பேருந்தை இருசக்கர வாகனங்களில் பேருந்து உறவினர்கள் துரத்தி மடக்கிப் பிடித்தனர். பின்பு, அங்கிருந்த கும்பலை சேர்ந்த 11 பேருக்கும் தர்ம அடி கொடுத்த உறவினர்கள், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஒப்படைத்தனர். ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் சீண்டல் செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.