திண்டிவனம் அருகே அரசடி விநாயகர் கோவிலில், அமைச்சர் மஸ்தான் தீபாராதனை செய்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஜக்காம்பேட்டை அரசடி விநாயகர் கோவிலில், 19ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவில்லை என்பதால், நேற்று பிற்பகல், அமைச்சர் மஸ்தான், கட்சியினருடன் விநாயகர் கோவிலுக்கு சென்றார். அமைச்சருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, கற்பூர தட்டுடன் வந்த நாகராஜ அய்யரிடமிருந்து, அமைச்சர் கற்பூர தட்டை வாங்கி, விநாயகருக்கு தீபாராதனை செய்தார்.
விநாயகருக்கு தீபாராதனை செய்த அமைச்சர் மஸ்தான்
அமைச்சர் கற்பூர தட்டை வாங்கி தீபாராதனை செய்தார்

247
முந்தைய செய்தி