மின் அளவீடு முறையை சீர்மைப்படுத்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல மாநிலங்களிலும் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து திண்டிவனத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திண்டிவனம் மரக்காணம் ரோடு பகுதியில் அமைந்துள்ள மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒன்றுகூடிய விவசாய சங்கத்தினர் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்பு மின்கோட்ட பொறியாளர் சிவசங்கரனிடம் கோரிக்கை மனுவை சங்க நிர்வாகிகள் கொடுத்தனர். இந்த போராட்டத்திற்கு மயிலம் ஒன்றியத்தலைவர் கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

240
முந்தைய செய்தி