திண்டிவனம் நகர் பகுதிக்கு பெரிய நீர் ஆதாரமாக கிடங்கல் ஏரி இருந்து வருகிறது. அரசு பதிவேட்டின் படி கிடங்கல் ஏரி சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள் காரணமாக இன்று சுமார் 300 ஏக்கர் அளவிற்கு கிடங்கல் ஏரி குறுகிப்போனது. தற்போது கிடங்கல் ஏரியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகளால் ஏரி மிகவும் அசுத்தம் அடைந்துள்ளது. மேலும், ஆகாயத்தாமரை செடிகளால் நீர்வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் கிடங்கல் ஏரிக்கு நீர்வரத்து வர துவங்கி உள்ளது. அதனால் தீவிர மழை துவங்குவதற்கு முன்பு பொதுப்பணித்துறையினர் கிடங்கல் ஏரியைத் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டுமென அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் கிடங்கல் ஏரியை நம்பி உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏரியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள்
கிடங்கல் ஏரி முழுக்க படர்ந்து இருக்கும் ஆகாயத்தாமரை செடிகள்

288
முந்தைய செய்தி