திண்டிவனம் அருகே செஞ்சி ரோட்டில் உள்ளது இருதயபுரம். இந்தப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் ஆண்டின் பெரும்பகுதி, கோலாமாவு தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். மார்கழி மாதம் துவங்கவுள்ளதையொட்டி திண்டிவனம் இருதயபுரத்தில் வண்ண கோலமாவு தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவரமாக ஈடுபட்டுள்ளனர்.
மார்கழி மாத துவங்குவதற்கு முன், பெரும்பாலான வீடுகளில் வண்ண கோலமாவு தயாரிப்பில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். மார்கழி மாதம் முழுவதும் வீட்டின் முன்வாசலில் பெண்கள் பெரிய அளவில் வண்ண கோலமிடுவது தொன்று தொட்டு நடந்து வரும் பழக்கம்.
மார்கழி மாதம் வரும் 17 ம் தேதி துவங்க இருப்பதால், அதிக அளவில் கோலமாவு தயாரிப்பு பணி நடந்து வருகின்றது. தொடர் மழையால் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டாலும், இடைவிடாமல் கோலமாவு தயாரிப்பில் குடும்பம், குடும்பாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிக்கப்பட்ட கோலமாவு, திண்டிவனம்-செஞ்சி சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இருதயபுரம் பகுதியில் தயாரிக்கப்படும் கோலமாவு, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, வேலுார், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.