திண்டிவனம் அருகே சாத்தனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த தேவன் 31 என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று உயிரிழந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்த அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் திரண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய உடல் வைத்திருந்த ஃப்ரீசர் பாக்ஸ் மூலமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் அங்கு குழுமியிருந்த பொதுமக்களில் 13 பேருக்கு மின்சாரம் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டன. அதே பகுதியை சேர்ந்த பகவான், அய்யம்மாள், அஞ்சலை, பத்மாவதி, கௌரி, சந்தியா, வெண்ணிலா, மஞ்சுளா உள்ளிட்ட 12 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாவு வீட்டிற்கு வந்தவர்களுக்கு மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சாத்தனூரில் சாவு வீட்டிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்
பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம்

329
முந்தைய செய்தி