முகப்பு திண்டிவனம் திண்டிவனத்தில் வீடுகளில் கொள்ளையடித்த இருவர் கைது

திண்டிவனத்தில் வீடுகளில் கொள்ளையடித்த இருவர் கைது

சோதனையில் 10 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல்

by Tindivanam News
robbery in admk official home at dadapuram near tindivanam

திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு பூட்டி இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வீடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகை, பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்த நிலையில் நேற்று மாலை வெள்ளிமேடு பேட்டை பகுதியில் உள்ள நகை அடகு கடையில் தங்க நகைகளை அடகு வைக்க வந்த இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஜூலை மாதம் பூட்டி இருந்த வீடுகளில் புகுந்து தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இருவரிடம் நடத்திய சோதனையில் அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  கிடங்கல் கோட்டை சிவாலயத்தில் 108 சங்காபிஷேக விழா

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole