மலேசியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என மலேசியா அரசு அறிவித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்குச் சென்று வரலாம். இந்தியர்கள் மற்றும் சீன நாட்டினருக்கு இந்த விதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மலேசியாவுக்கு நீங்கள் செல்லும் போது, 30 நாட்களுக்கும் குறைவாக அங்கே தங்குவதாக இருந்தால் அதற்கு தனியாக விசா பெறத் தேவையில்லை. ஏற்கனவே இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது மலேசியாவும் விசா தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், துருக்கி மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மலேசியா செல்ல விசா தேவையில்லை என்ற நிலையில், இப்போது அதில் இந்தியா மற்றும் சீனாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை
30 நாட்கள் வரை தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

265
முந்தைய செய்தி