விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகின்றன. கொழுவாரி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக சமையலறைக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சமையலறைக் கட்டிடத்தினை இன்று வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா முரளி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கொழுவாரி ஊராட்சி பள்ளியில் புதிய சமையலறை கட்டிடம்
வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா முரளி திறந்து வைத்தார்

353
முந்தைய செய்தி