விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சுற்றி பல விவசாய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள வயல்வெளிகளில் இரவு நேரங்களில் அமர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் மர்மநபர்கள் அங்குள்ள விவசாய மோட்டார்களில் இருக்கும் பொருட்களை திருடிச் செல்வது வாடிக்கையாக்கி உள்ளது. மேலும், வயலில் அமர்ந்து மது அருந்துபவர்கள், அவர்கள் குடித்த பாட்டில்களை அங்கேயே உடைத்துச் செல்வதும் பெரும்பாலும் நடைபெறுகிறது. இதனால் விவசாய பெருமக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமத்தில் விவசாயி ஒருவர் காலையில் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது மோட்டரை ஆன் செய்தபோது ஸ்டார்டர் மட்டும் துவங்கி உள்ளது. மோட்டாரில் இருந்து தண்ணீர் வராததை கண்ட விவசாயி கிணற்றில் இறங்கி பார்த்தபோது ஸ்டார்ட்டருக்கும் மோட்டருக்கும் இடையில் உள்ள விலை உயர்ந்த மின் கம்பிகள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அருகில் உள்ள வயல்வெளியில் மர்மநகரில் குடித்திருப்பதும், கஞ்சா பயன்படுத்தியதற்குமான அடையாளங்கள் இருந்ததாகவும் விவசாயி தெரிவித்தார். தற்போது திருடப்பட்ட மின் கம்பியை மாற்ற குறைந்தபட்சம் 25 ஆயிரம் வரை பணவிரயம் ஏற்படும் என விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். இதனால் இந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வயல்வெளிகளில் மது அருந்த]தி குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.