கிளியனூர் அருகில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விரைந்து சென்று சோதனை நடத்திய போலீசார் நிலத்தின் உரிமையாளரை கைது செய்தனர். கிளியனூர் அடுத்துள்ள கொந்தாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாலாஜி. இவரது நண்பர் தமிழ் என்கிற தமிழரசன் புதுச்சேரி பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பாலாஜியிடம் தமிழரசன் இடம் கேட்டு உள்ளார். நண்பனுக்காக தனது நிலத்திலேயே நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க இடம் கொடுத்துள்ளார், பாலாஜி. தமிழரசன் தனது கூட்டாளிகளுடன் வந்து அந்த இடத்தில் தங்கி இருந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், அடையாளம் தெரியாத சிலர் வந்து சென்றதாகவும் பாலாஜி தனிப்படை போலீசாரிடம் தெரிவித்தார். பின்பு பாலாஜியை கைது செய்த போலீசார் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த பொருட்களை பரிமுதல் செய்ததோடு தலைமறைவான சுதர்சன் மற்றும் இருவரை தேடி வருகின்றனர்.

345
முந்தைய செய்தி