தீபாவளி விடுமுறை முடிந்து, நேற்று தென்மாவட்டங்களில் இருந்து 35 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்கேட்டைக் கடந்து சென்றன. கடந்த 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களில் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் தீபாவளியை கொண்டாட தங்களது ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் 2 நாட்கள் தொடர்ச்சியாக 65 ஆயிரம் கார்கள் உட்பட 1 லட்சத்து 10ஆயிரம் வாகனங்களில் விக்கிரவாண்டி டோல்கேட்டை கடந்து சென்றனர். விடுமுறை முடிந்த நிலையில், நேற்று மாலை 4:00 மணி முதல், வாகனங்கள் சென்னைக்கு திரும்பின. காலை முதல் சராசரியான போக்குவரத்து காணப்பட்டாலும் மாலை 4:00 மணிக்கு மேல் விறுவிறுப்பான போக்குவரத்து துவங்கியது. மாலை 6:30 மணிவரை 22 ஆயிரம் கார்கள் உட்பட 28 ஆயிரம் வாகனங்களும், நள்ளிரவு 12:00 மணி வரை 35 ஆயிரம் வாகனங்களும் டோல்கேட்டை கடந்தன. வாகனங்கள் அதிகமாக செல்லும் என்பதால் டோல்கேட்டில் 8 லேன்கள் திறக்கப்பட்டதால் வாகனங்கள் நெரிசலின்றி எளிதாக கடந்து சென்றன.

305
முந்தைய செய்தி