விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், ரயில் நிலையம் அருகே வாரச் சந்தை அமைப்பது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை இளநிலை உதவியாளர் அவர்கள் வரவேற்றார். பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் எம். அப்துல் சலாம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் வாரச்சந்தை அமைக்க காலியாக உள்ள பகுதியில் 99 ஆண்டுகள் குத்தகை கோரி ரயில்வே துறைக்கு விண்ணப்பம் அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர், மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகில் வாரச்சந்தை – மக்கள் மகிழ்ச்சி
99 ஆண்டுகள் குத்தகை வேண்டி விண்ணப்பம்

288
முந்தைய செய்தி