விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு முறையாக எந்த பொருளையும் வழங்காததாக கூறி ஊழியர் சந்திரமோகன் என்பவரை பொதுமக்கள் கடைக்குள்ளயே வைத்து பூட்டினார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டிய கடைக்குள் இருந்த ஊழியரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ரேஷன் கடை ஊழியரை உள்ளேயே வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.