முகப்பு விழுப்புரம் விழுப்புரத்தில் உலக மரபு வார விழா

விழுப்புரத்தில் உலக மரபு வார விழா

வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி

by Tindivanam News
World Heritage Week day celebration at Villupuram VRB Hr Sec School

விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை சார்பில் உலக மரபு வார விழா விழுப்புரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வே.சோழன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஆர்.கந்தசாமி வரவேற்றார்.

world heritage week day 01

வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரபுச் சின்னங்கள், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களிடம் விளக்கிப் பேசினார். மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பானை ஓடுகள் உள்ளிட்டவை இதில் காட்சிப்படுத்தப்பட்டன.

world heritage week day 02

இந்த நிகழ்ச்சியில், யாதும் ஊரே யாவரும் கேளிர் சீனிவாசன், சக்தி, ஜவகர், ராகுல், வரலாற்று ஆர்வலர்கள் பஞ்சமூர்த்தி, மணிகண்டன், ராகுல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் ‌உதவி தலைமை ஆசிரியர் பிரிதிவிராஜ் நன்றி கூறினார்.

world heritage week day 03

விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகப் பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  மருத்துவமனை எதிரில் பராமரிப்பு இல்லாத குடிநீர்த்தொட்டி

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole