முகப்பு உலகம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம்

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம்

மொராக்கோவில் பெய்யும் கனமழை

by Tindivanam News

மொராக்கோவில் பெய்த எதிர்பாராத கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள பல இடங்களில் நீர் நிரம்பி காணப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற சஹாரா பாலைவனம் மொராக்கோவில் உள்ளது. இந்த இடம் எப்போதும் வெப்பம் நிறைந்து நீர் ஆதாரங்கள் இன்றியே காணப்படுகிறது.

மேலும், புவி வெப்பமயமாதலால் சஹாரா பாலைவனம் மிகப்பெரிய சேதத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மொராக்கோ வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக சஹாரா பாலைவனத்தில் அளவுக்கு அதிகமான கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சஹாரா பாலைவனத்தின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன.

மேலும், ஜகொரா மற்றும் டாடா ஆகிய இடங்களுக்கு இடையே அரை நூற்றாண்டாக வறண்டு கிடந்த இரிகி ஏரி நிரம்பியுள்ளதாக நாசாவின் சேட்டிலைட் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த மாதம் வந்த வெள்ளத்தால் மொரோக்கோவில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சஹாரா பாலைவனம் மேற்கு ஆப்பிரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் 9 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு நீண்டு காணப்படுகிறது.

  மலேசியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole