இதற்கெல்லாம் மரணதண்டனை கொடுப்பார்களா என்று என்னும் அளவிற்கு ஒரு தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆமாங்க, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டங்கள் அமலில் உள்ளது. அதன்படி இசுலாமிய மதத்தை யாரும் இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட கூடாது என்பது சட்ட விதி. அதற்கு எதிராக செயல்பட்டதாக 22 வயதான பாகிஸ்தான் இளைஞருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022’ம் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தும் விதத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே, பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய மதம் குறித்து அவதூறு பரப்பினால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், மேலும் இந்த புகைப்படங்களை 17வயது சிறுவர் ஒருவரும் சமூகவலைதங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த, இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. தற்போது, இந்த வழக்கில் 22 வயது இளைஞர், 17 வயது சிறுவன் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கின் தீர்ப்பில் 22 வயது இளைஞருக்கு மரண தண்டனையும், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மதத்தை தவறாக பேசியதால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சமத்துவம், உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க….