சமீப காலமாக கடன் சுமையால் பாகிஸ்தான் தத்தளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் உணவிற்கும், அன்றாட வாழ்விற்கும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானில் 2022’ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு பிறகு குடும்பங்களின் கடன் சுமையும் அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர். இதனை சமாளிக்க அதிக சிறுமிகள் “காலநிலை மணமகள்களாக” மாற்றப்படுகிறார்கள் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 2022’ஆம் ஆண்டிற்கு பிறகு பலுசிஸ்தான் பகுதியில் குழந்தைத் திருமணங்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த நிலையை மட்டுப்படுத்தி குழந்தைத் திருமணங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.