சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் தொட்ட நிலையில் சிறிது காலம் போர் நடவடிக்கைகள் அமைதி பெற்று இருந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த வான்வழித் தாக்குதலின் மூலம் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் உக்ரைனின் மீது ரஷ்யா உக்கிரமாக போரைத் துவங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தாக்குதல்கள் பெரும்பாலும் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடத்தப்பட்டு இருந்தாலும், தலைநகர் கிவயில் தாக்குதல்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ரஷ்யா ஏவிய 49 ட்ரோன்களில் 29 ட்ரோன்களை அழித்ததாக உக்ரைனிய விமானப்படை கூறியுள்ளது. இரவு முழுவதும் கிவி மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலை நடத்தியதாக விமானப்படைத் தெரிவித்துள்ளது.
வீடுகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், வாகனங்கள் என அனைத்தும் இந்த தாக்குதலில் பலத்த சேதம் அடைந்துள்ளதாக உக்கிரனைய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் முப்பத்தி ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக டிசம்பர் 30ஆம் தேதி உக்ரைன் ரஷ்ய நாட்டின் பெல்ஹாரத் நகர் மீது ட்ரோன் துதாகுதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.