கடந்த திங்கட்கிழமை ஜப்பான் நாட்டின் மத்திய பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டது. முதலில் நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது, பின்பு தளர்த்தப்பட்டது. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50’ஐ நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல இடங்களில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து உள்ளதாகவும், 50,000’க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடுபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கான மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற உலக நாடுகளும் உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.