டிரம்ப் : கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் மோசமடைந்துள்ளது; வரியைக் குறைத்து, சிறந்த பொருளாதார நாடாக மாற்றுவேன்.
கமலா ஹாரிஸ் : டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சுகாதாரமும், பொருளாதாரமும் மோசமாக இருந்தது. கடந்த ஆட்சியில் டிரம்ப் செய்த தவறுகளை 4 ஆண்டுகளில் பைடன் சரி செய்துள்ளார். சீனாவுக்கு அமெரிக்காவை விற்றவர் டிரம்ப். அவரது ஆட்சியில் வர்த்தகப் போர் ஏற்பட்டது. பணக்காரர்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளித்தவர் டிரம்ப். சட்டவிரோத குடியேற்றத்தைத் தவிர பேச டிரம்புக்கு வேறு எதுவும் இல்லை. அரசியலமைப்பின்மீது நம்பிக்கையற்றவர் டிரம்ப் என அவருடன் பணியாற்றியவரே கூறியுள்ளார்.
டிரம்ப் : மார்க்சிய சிந்தனையாளராக உள்ளார் கமலா ஹாரிஸ்; பைடனின் திட்டத்தையே தொடர்ந்து அவர் செயல்படுத்துவார்; குற்றச்செயலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் புலம்பெயர்ந்தோராக உள்ளனர்.
கமலா ஹாரிஸ் : ஒரு பெண்ணின் உடல் தொடர்பாக மற்றவர் முடிவெடுக்க அனுமதிக்கக் கூடாது; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம்; டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையை கொண்டுவந்துவிடுவார்.
டிரம்ப் : பைடன் ஆட்சியில் 9 மாதங்களிலும் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றனர்; எனது நிலைப்பாடு கருக்கலைப்புக்கு எதிரானது என்றாலும் மக்களின் கருத்துபடி செயல்படுவேன்.
கமலா ஹாரிஸ் : டிரம்பே குற்றவாளிதான், குற்றவாளிகளைப் பற்றி டிரம்ப் பேசுவது வேடிக்கையாக உள்ளது; டிரம்ப் மீண்டும் அதிபரானால் தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிவிடுவார். அமெரிக்காவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு தலைவர் தேவை; நடுத்தர மக்களின் நிலையை உயர்த்த திட்டங்களை வகுத்து வருகிறோம்.
டிரம்ப் : அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் பயணித்தால் மூன்றாம் உலகப்போர் உருவாகும்; குற்றவாளிகள், தீவிரவாதிகள், கடத்தல்காரர்களை நாட்டில் குடியேற பைடன் அனுமதி அளித்துள்ளார் – தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நோக்கத்தில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு பைடன் அனுமதி; நீதித்துறையை எனக்கு எதிராக திருப்பிவிட்டு தேர்தலில் வெல்ல ஜனநாயக கட்சி முயற்சிக்கிறது. அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் மீது கமலா ஹாரிசுக்கு தீவிர பகை உள்ளது; கமலா ஹாரிஸ் அதிபரானால் 2 ஆண்டுகளில் இஸ்ரேல் காணாமல் போய்விடும்; ஹாரிஸ் நிர்வாகத்தின் கீழ், இஸ்ரேலின் இருப்பு ஆபத்தில் இருக்கும்.
கமலா ஹாரிஸ் : டிரம்ப் கூறியது அனைத்துமே உண்மைக்கு புறம்பானது; சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் தொடர்ந்து இஸ்ரேலை ஆதரித்து வருகிறேன்.