உலகெங்கிலும் கருக்கலைப்பு (abortion) என்பது குற்றமாக கருதப்பட்டு, சட்டரீதியான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. சமீபத்தில், அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு அமெரிக்கா நாடு முழுதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
இதேபோல் பிரச்சனையும் பிரான்சில் எழுப்பப்பட்டது. அப்போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்சில் வாழும் பெண்களின் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, நிலைநாட்டப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான், உலகிலேயே கருக்கலைப்பு என்பது அவரவர் தார்மீக உரிமையென்றும், பெண்கள் கருக்கலைப்புக்கு அங்கீகாரம் அளித்து அடிப்படை உரிமையாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கு ஆதரவான இந்த அரசியலமைப்பு சட்ட உரிமை மசோதாவை 780 உறுப்பினர்கள் ஆதரவோடு பிரான்சு அரசு நிறைவேற்றியுள்ளது.
ஆக, அமெரிக்காவில் கருக்கலைப்பு அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பளித்த நிலையில், பிரான்சில் கருக்கலைப்புக்கு உரிமை வழங்கி சட்டமாக இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.