முகப்பு மயிலம் மோடியின் தாயார் மற்றும் நடிகர் மாரிமுத்துவுக்கு மயிலத்தில் சிலை

மோடியின் தாயார் மற்றும் நடிகர் மாரிமுத்துவுக்கு மயிலத்தில் சிலை

சிலைகளை திறந்து வைத்த ஜாக்குவார் தங்கம்

by Tindivanam News

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி. ஹீராபென் அவர்கள் வயது முதிர்வு காரணமாக காலமானார். அதுபோலவே, சன் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். இவர்கள் இருவருக்கும் திண்டிவனம் அருகே மயிலத்தில் சிலைகள் திறந்த பாஜகவினர் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஹீராபென் மோடி அவர்கள் நாற்காலியில் அமர்ந்து இருப்பது போன்றும், நடிகர் மாரிமுத்து நிற்பது போன்று சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை மேளதாளங்கள் முழங்க திரைப்படச் சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் திறந்து வைத்தார்.

இந்த சிலைகள் நிறுவப்பட்டதற்கான காரணங்களை கேட்கும்போது உலகம் போற்றும் தலைவர் பிரதமர் மோடி அவரை ஈன்ற தாயாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஹீராபென் மோடி அவர்களுக்கு சிலை வடிக்கப்பட்டது என அங்கிருந்த சிலர் கூறினார்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  நான்கு வழிச்சாலை திட்ட பணியால் நெடுஞ்சாலை சேதம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole