முகப்பு கல்விச்செய்தி மருத்துவ கல்வி இயக்குனராக ஜெ.சங்குமணி நியமனம்

மருத்துவ கல்வி இயக்குனராக ஜெ.சங்குமணி நியமனம்

தமிழ்நாடு அரசு உத்தரவு

by Tindivanam News
new director for tamil nadu medical directorate dr. sangumani

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர் கடந்த அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ள டாக்டர் ஜெ.சங்குமணியை பதவி உயர்வு அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்டார். மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஜெ.சங்குமணி 33 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இவர் முதன் முதலாக தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர், பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றி வந்தார். இதற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  அரசு கல்லூரி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole