சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி. ஹீராபென் அவர்கள் வயது முதிர்வு காரணமாக காலமானார். அதுபோலவே, சன் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். இவர்கள் இருவருக்கும் திண்டிவனம் அருகே மயிலத்தில் சிலைகள் திறந்த பாஜகவினர் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஹீராபென் மோடி அவர்கள் நாற்காலியில் அமர்ந்து இருப்பது போன்றும், நடிகர் மாரிமுத்து நிற்பது போன்று சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை மேளதாளங்கள் முழங்க திரைப்படச் சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் திறந்து வைத்தார்.
இந்த சிலைகள் நிறுவப்பட்டதற்கான காரணங்களை கேட்கும்போது உலகம் போற்றும் தலைவர் பிரதமர் மோடி அவரை ஈன்ற தாயாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஹீராபென் மோடி அவர்களுக்கு சிலை வடிக்கப்பட்டது என அங்கிருந்த சிலர் கூறினார்.