திண்டிவனத்தில் இருந்து மயிலம் செல்லும் வழியில் கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் புதிய மேம்பால கட்டுமான பணிகள் ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் ரூ.28 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிகிறது. மேம்பால பணிகள் நிறைவடையும் தருவாயில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய மேம்பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து வாகனங்கள் படையெடுக்க துவங்கியுள்ளது. ஆதலால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தின் மேல் வாகனங்கள் செல்ல அனுமதி அளித்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
இன்னும், ஒருசில மாதங்களில் மேம்பால பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.